ஒரு வளமான இலங்கையை எமது பிள்ளைகளுக்கு கையளித்தல்

ஒரு வளமான இலங்கையை எமது பிள்ளைகளுக்கு கையளித்தல்

கலாநிதி குணதிலக தந்திரிகம

சில தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை ஒரு வளமான நாடாக இருந்தது, ஆனால் தற்போது அது பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இலங்கை மற்றும் வெளிநாடுகளைச்; சார்ந்த கல்வியாளர்கள், தொழில்வாண்மைமிக்கோர் மற்றும் ஏனைய சிந்தனையாளர்கள் குழுக்களுக்கிடையில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பின் நோக்கம் யாதெனில், காலப்போக்கில் இலங்கையின் சமூக-கலாச்சார, அரசியல், பொருளாதார மற்றும் சூழலியல் அம்சங்கள் தொடர்பிலும் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் காரணிகளையும் இனங்காண்பதாகும். கணக்கெடுப்பானது இரண்டு வினாக்களை மையமாகக் கொண்டு வரலாற்று பரிணாமம் குறித்து ஆய்வு செய்தது : “சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை என்ன தவறு நடந்தது” மற்றும்  “இலங்கையில் சிறந்தது எது?” என்பதாகும்.

இரண்டு கேள்விகளிலும் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஒரு ஆழமான ஆய்வுக்கான பயனுள்ள தொடக்க புள்ளியை வழங்கின. கணக்கெடுப்பில் பங்கேற்ற பெரும்பாலானோர்  இலங்கையானது பொருளாதாரம், அரசியல் கட்டமைப்பு, சமூக ஒழுங்கு மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல அம்சங்களில் கடுமையான நெருக்கடியில் இருப்பதாக ஒப்புக்கொண்டனர் கணக்கெடுப்பு பதில்களிலிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளதன்படி, எந்த துறையிலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இல்லாமல் நாடு வேகமாக ஒரு பள்ளத்தை நோக்கி நகர்கின்றது என்பதாகும்.

கணக்கெடுப்புக்கு பதிலளித்தவர்களில் குறிப்பிடத்தக்க பகுதியினர், நாடு மேலும் தாமதமின்றி குறிப்பிட்ட சில திருத்த நடவடிக்கைகளைச் அமுல்படுத்தும் போது இலங்கை இன்னும் செழிப்பான நிலையை அடைய முடியும் என கருத்து தெரிவித்தனர். பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர், இலங்கை  பல வளர்ந்து வரும் நாடுகளை விட அல்லது சில உயர்வருமானம் மிக்க நாடுகளின் வள நன்கொடைகளோடு ஒப்பிடும்போது பலவாறான நன்மைகளைக் கொண்டிருக்கின்றது என அடையாளப்படுத்துகின்றனர்.

இலங்கையில் சிறந்தது எது?

நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்டதாவது, இலங்கையானது மனித வளங்கள், இயற்கை வளங்கள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள்இ ஆகிய மூன்று பிரதான வளங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, இலங்கையர்கள் திறமையானவர்கள், ஆக்கபூர்வமானவர்கள் மற்றும் வளமிக்கவர்கள் ஆவர். தனிநபர் மட்டத்தில் உள்ள இலங்கையர்களின் உள்ளார்ந்த திறமைகளைப் பயன்படுத்திக்கொள்வதும், பெரிய சமுதாயத்திற்குள் நல்ல ஒத்துழைப்புக்கான திறனை வளர்ப்பதற்கான வழிகளை வடிவமைப்பதுமே நாட்டின் முன் உள்ள சவால் ஆகும்.

இரண்டாவதாக, இயற்கை வளங்களைப் பற்றியது. இலங்கை பல காலநிலை வலயங்களைக் கொண்டுள்ளது. இலேசான வெப்பநிலை முதல் வெதுவெதுப்பான காலநிலை மற்றும் ஈர உலர் வலயம் இரத்தினம், இல்மனைற்று மற்றும் டைட்டானியம் போன்ற கனிப் பொருட்கள் அடங்கலாக பல இயற்கை  வளங்களையும் கொண்டுள்ளது.

மூன்றாவதாக, மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்களின் அடிப்படையில், நீர்;ப்பாசன அமைப்பு மற்றும் நன்கு அபிவிருத்தி செய்யப்பட்ட வீதி வலையமைப்பு அடங்கலாக சிறப்பாக கட்டமைக்கப்பட்ட சூழலை இலங்கை மரபுரிமையாகக் கொண்டுள்ளது. கணக்கெடுப்பின்படி, மருத்துவ சுற்றுலா, உள்ளுர் பழங்கள் மற்றும் புவியியல் இருப்பிடம் ஆகியவை அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு சாத்தியமானவைகளாக உள்ளன.

குறிப்பாக தேயிலைத் தோட்டங்களைக் கொண்டு செயல்படும் பெருந்தோட்டத் துறை உள்ளது, அவை மிகத் தேவையான வெளிநாட்டு நாணயத்தையும் நிலையான வருமான மூலத்தையும் வழங்கும் உயர்தர தேயிலையைத் தொடர்ந்து உற்பத்தி செய்கின்றன. எவ்வாறாயினும், குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான வளங்களை திறமையற்ற முறையில் பயன்படுத்துவதால் இலங்கையினுடைய அபிவிருத்தி உந்துதல் இதுவரை முடிவுகளைத் தரவில்லை.

என்ன தவறு நடந்தது?

ஒரு நாடாக இலங்கை அதன் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான உண்மையான ஆற்றலிலிருந்து விலகிவிட்டது என்று கணக்கெடுப்பு வெளிப்படுத்தியது. இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் வரலாற்றுப் பரிணாமம் மற்றும் அவற்றின் மூல காரணங்களைப் புரிந்துகொள்வது அல்லது வேறுவிதமாகக் கூறினால் “என்ன தவறு நடந்தது?” என்பது, இலங்கையை ஒரு புதிய, நிலையான, மக்கள் நட்பு வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வருவது பற்றி புதிதாக சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

கணக்கெடுப்பின் மூலம் பெறப்பட்ட அனைத்து பதில்களையும் வகைப்படுத்துவதன் மூலம், பரந்த அளவில் வரையறுக்கப்பட்ட பத்து காரணங்களை அல்லது சவால்களை அடையாளம் காண முடிந்தது. இது வளர்ச்சியின் எந்தத் துறையிலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இல்லாமல் நாடு ஒரு பள்ளத்தை நோக்கி வேகமாகச் செல்ல காரணமாகிறது. இந்த கணக்கெடுப்பில் இலங்கை கொண்டிருக்கும் வள-ஆதாரத்தை அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால் “இலங்கையில் சிறந்தது எது?” என்பதாகும். இவை வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு உதவ முடியும்.

பத்து சவால்கள்

(1) ஜனநாயகத்தின் நடைமுறை

பதிலளித்த ஒருவர் ஜனநாயகத்தின் நடைமுறையை “ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைப் புரிந்து கொள்ளவில்லை” என்று சுருக்கமாகக் கூறினார். மற்றொரு கருத்துக் கூறியவர் இதை  “ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தும் போது பெரும்பான்மை மக்களின் குறுகிய  கண்ணோட்டம் கொண்ட நடத்தை” என்று சுருக்கமாகக் கூறினார். மிகவும் அடிப்படை மட்டத்தில், பார்க்கும் போது பெரும்பான்மையான பொதுமக்களின் அறியாமை காரணமாக அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களுடைய நலனுக்காக பொதுமக்களின் உரிமைகளைப் பயன்படுத்த அனுமதிக்கின்றதாக இருக்கலாம். சில இலங்கையர்கள் நில பிரபுத்துவ முறையை நம்புகிறார்கள், அங்கு தலைவர் முடிவு செய்து தனிநபர்களைப் பாதுகாப்பார், அதே நேரத்தில் தனிநபர்கள் தங்களது விசுவாசத்தை தலைவருக்கு வழங்குகின்றனர் என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

(2) மனப்பாங்கு மற்றும் நெறிமுறை நடத்தை

இலங்கையர்கள் வரலாற்று ரீதியாக சகிப்புத்தன்மை, ஒருவருக்கொருவர் கவனித்தல் மற்றும் விருந்தோம்பல் போன்றவற்றுடன் நெறிமுறை நடத்தையின் உயர் தரங்களை பராமரித்ததாகக் கருதப்பட்டாலும், சில குணாதிசயங்களால் இந்த குணங்கள் சீரழிந்து, அதாவது பேராசை, சுயநலம், சகிப்புத்தன்மை இன்மை மற்றும் மனிதர்கள், விலங்குகள் உயிர்களைப் புறக்கணித்தல் ஆகியவற்றால் மாற்றமடைந்துள்ளன.

(3) தவறான பொருளாதார முகாமைத்துவம்

பதிலளித்த பலர் தவறான பொருளாதார முகாமைத்துவத்தை, ஒரு நாடாக முன்னேற முடியாத இலங்கையின் தோல்விக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக அடையாளம் கண்டுள்ளனர். அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தின் விளைவாக இலங்கையால் பெரும்பாலான மக்களுக்கு வாழத்தகுந்த வருமானத்தை உருவாக்க, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க, விலையின் நிலையான தன்மையை பராமரிக்க அல்லது போதுமான தேசிய சேமிப்பை உருவாக்க மற்றும் அந்நிய செலாவணியை சம்பாதிக்க முடியவில்லை. இந்த தோல்விகள் இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பதில் இலங்கையின் இயலாமைக்கு வழிவகுத்தது மற்றும் பல மக்கள் வறுமை, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஏழ்மைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

(4) தவறான சுற்றுச்சூழல் முகாமைத்துவம்

இலங்கையின் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கின அமைப்புகளின் அழிவு மிகவும் பெறுமதிப்புமிக்க உயிர் பன்முகத்தன்மையை இழந்ததோடு அதன் மீளுருவாக்கம் செய்யும் திறனையும் இழக்க வழிவகுத்தது. இலங்கையைப் பாதுகாப்பதாகக் கூறினாலும் வனப்பகுதி வேகமாக குறைந்து வருகிறது. வெறுமனே மனிதர்கள் இயற்கை வாழ்விடங்களை ஆக்கிரமிப்பதால் இலங்கையில் குறைந்து வரும் காடுகளின் வெளிப்பாடே மனித-யானை மோதல் என்று அழைக்கப்படுகிறது.

(5) அரசாங்கத்தின் நிதி பொறுப்பு

பொறுப்பற்ற நிதி முகாமைத்துவமானது அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவினங்களின் வீணாண பயன்பாட்டுக்கு வழிவகுத்தது. பல பதிலளித்தவர்களின் கருத்துப்படி, முக்கியத்துவமற்ற திரும்பல்களைக் கொண்ட திட்டங்களில் பாரிய அரசாங்க முதலீடுகள் நாட்டின் உற்பத்தித் திறனை மேம்படுத்தாமையினால், அவை உள்ளக நிதி சமநிலை, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் அந்நிய செலாவணி கணக்குகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்திருக்கின்றன.

(6) நீதித்துறை அமைப்பு

கணக்கெடுப்பில் பங்கேற்பாளர்கள் பல்வேறு காரணங்களால் மக்கள் “சட்டம் மற்றும் ஒழுங்கை” மதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர் மற்றும் நீதித்துறை அமைப்பில் மக்களின் நம்பிக்கையை இழக்கும் போக்கு இருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கையால் நீதித்துறையின் மேலாதிக்கத்தையும் சட்டத்தின் கீழான சமத்துவத்தையும் மீட்டெடுத்தாலே தவிர நீதித்துறையில் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதில் சிறிதளவு நம்பிக்கையே உள்ளது.

(7) கல்வி அமைப்பு

தற்போதைய கல்வி முறையானது ஆக்கப்பூர்வமான மனதையும் திறமையான மனிதர்களையும் சரியான மனப்பாங்கையும் உருவாக்கத் தவறிவிட்டது என பதிலளித்தவர்கள்  பல எடுத்துக்காட்டுகளை முன்னிலைப்படுத்துகின்றனர். உதாரணமாக அரச அதிகாரிகள் ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும் செயல்படவும் தவறுகின்றனர்.

(8) மனித வளங்களின் பயன்பாடு

சமூக அந்தஸ்து, குடும்ப தொடர்புகள் மற்றும் பிற உதவிகளைப் பொருட்படுத்தாமல் சிறந்த நிபுணத்துவம் மற்றும் திறமைகளுக்கு ஏற்ப முக்கிய மற்றும் பொறுப்பான பதவிகளில் பொருத்தமான மனித வளங்களைப் பயன்படுத்தாததே இலங்கையின் அபிவிருத்தி தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும் என பதிலளித்தவர்கள்; குறிப்பிடுகிறார்கள். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்காக நாட்டுக்குள் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதற்கான நாட்டின் திறன்களை இழந்ததோடு, மூளைசாலிகள் புலம்பெயரவும் வழிவகுத்தது.

(9) வெளிநாட்டுக் கடன் சுமை

அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் குறுகிய நோக்குடைய பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகளின் விளைவாக, குறிப்பாக உற்பத்தி அல்லாத திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதால், இலங்கையானது ஒரு ‘கடன் பொறியில்” சிக்கி, பற்றாக்குறையான வெளிநாட்டு வளங்களை முகாமைத்துவம் செய்வதில் மிகவும் கடினமான நிலையில் உள்ளது.

(10) சர்வதேச உறவுகள் மற்றும் பூகோள அரசியல்

இலங்கை அதன் மூலோபாய இருப்பிடம் காரணமாக உலகின் வல்லரசுகளிடையே ஆர்வத்தைப் பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். வெளிநாட்டு வல்லரசுகளின் அதிகாரப் போட்டிகளானது இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதாக கணக்கெடுப்பு வெளிப்படுத்தியது.

சுருக்கம்

சில தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை ஒரு வளமான நாடாக இருந்தது ஆனால் தற்போது அது பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இது அபிவிருத்தி மற்றும் செழிப்புக்கான அதன் உண்மையான திறனில் இருந்து விலகியுள்ளது. “என்ன தவறு நடந்தது?” அல்லது வேறு விதமாகப் புரிந்துகொள்வது, ஆயின் “இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் வரலாற்றுப் பரிணாமம் மற்றும் அவற்றின் மூல காரணங்களை” புரிந்துகொள்வது, இலங்கையை ஒரு புதிய, நிலையான, மக்கள் நட்பு வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வருவது பற்றி, புதிதாக சிந்திக்க வேண்டியது அவசியமானதாகும். கணக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில், நாட்டின் தற்போதைய நிலையில் பத்து சவால்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கணக்கெடுப்பு கண்டுபிடிப்புக்களின் படி “இலங்கையில் சிறந்தது எது?” அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வளர்ச்சி மற்றும் செழிப்பை ஆதரிக்கக்கூடிய வள – அடிப்படையை இலங்கை கொண்டுள்ளது.

இறுதிக் கருத்துக்கள்

இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கான பாதையை அடையாளம் காண மேலும் பத்து சவால்களை ஆராய வேண்டும். இந்த பணி இந்த ஆய்வின் அடுத்த கட்டத்திற்கு விடப்பட்டுள்ளது.

குறிப்புக்கள்

1. ஆசிரியர் “தாய் நாட்டுக்கான மூத்தவர்கள்” அமைப்பின் உறுப்பினராக உள்ளார். இது 2019 இல் நிறுவப்பட்ட ஒரு தன்னார்வ சமூகக் குழுவாகும், இது எங்கள் தாய் நாடான இலங்கையின் முன்னேற்றத்தை விரும்புகிறது. ஆய்வுக்கு பதிலளித்த அனைவருக்கும் ஆசிரியர் தனது உண்மையான நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறார். கணக்கெடுப்பு அறிக்கையை மதிப்பாய்வு செய்ய முன்வந்து மதிப்புமிக்க கருத்துகளை தெரிவித்தவர்களுக்கு அவர் குறிப்பாக நன்றியுள்ளவராவார். இந்த கணக்கெடுப்பு ஆராய்ச்சியின் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய டபிள்யூ. ஏ. ஜெயசுந்தரவுக்கு (சட்டத்தரணி) அவர்களுக்கு சிறப்பு நன்றிகள் உரித்தாகட்டும். இவ் ஆக்கத்தை தமிழாக்கம் செய்து தந்தமைக்காக திரு. பக்கீர் முகைதீன் றிஸ்வான் (சட்டத்தரணி) அவர்களை ஆசிரியர் பெரிதும் பாராட்டுகிறார்.

2. இது 8 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையின் சுருக்கப்பட்ட பதிப்பாகும் விரிவான  அறிக்கையைப் பதிவிறக்கம் செய்ய இவ் இணைப்பைப் பயன்படுத்தவும்: hவவிள:ஃஃநெறாழசணைழnளிடரள.ழசபஃpரடிடiஉயவழைளெஃ

3. தயவுசெய்து உங்கள் கருத்துக்களை அனுப்பவும்: ளுநnழைசள கழச ஆழவாநசடயனெஇ

நுஅயடை: யனஅin;நெறாழசணைழnளிடரள.ழசப. றுநடி pயபந: றறற.நெறாழசணைழnளிடரள.ழசபஃpரடிடiஉ-யறயசநநௌளஃ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: